வடகிழக்கு மாநிலங்களை போல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி தமிழிசை சவுந்திரராஜன் பேச்சு
வடமாநிலங்களை போல், தமிழகத்தில் விரைவில் பா.ஜ.க. ஆட்சி அமையும் என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
பாவூர்சத்திரம்,
வடமாநிலங்களை போல், தமிழகத்தில் விரைவில் பா.ஜ.க. ஆட்சி அமையும் என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் கீழப்பாவூரில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமை தாங்கினார். நகர தலைவர் முருகன் வரவேற்றார்.
கூட்டத்தில் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கலந்து கொண்டு பேசியதாவது:–
தமிழகத்தில் வெற்றிடம்
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றும் தொண்டர்களை கொண்ட கட்சி பா.ஜ.க. தற்போது இந்தியாவில் 22 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. எங்களுக்கு உலகநாயகனை(கமல்ஹாசன்) பற்றியோ, சூப்பர் ஸ்டார்(ரஜினிகாந்த்) பற்றியோ கவலை இல்லை. உலக நாயகனாகவும், சூப்பர் ஸ்டாராகவும் பிரதமர் மோடி திகழ்கிறார்.
எங்கள் கட்சி மீது யாராலும் ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியாது. தற்போது தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. இதை பா.ஜ.க.வால் மட்டுமே நிரப்ப முடியும். எங்களால் மட்டுமே தமிழகத்தில் மாற்றத்தை கொடுக்க முடியும்.
பா.ஜ.க. ஆட்சி
இந்த ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. தி.மு.க.வின் தலைவராக கூட ஆக முடியாத ஸ்டாலினால், எப்படி ஆட்சியை பிடிக்க முடியும். சிறுபான்மை மக்களை மதிக்கும் கட்சியாக பா.ஜ.க. உள்ளது. தமிழக விவசாயிகளுக்கு அதிகமாக பயிர் காப்பீடு தொகை வழங்கி இருக்கிறோம்.
தற்போது நடந்து முடிந்த 3 வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று உள்ளது. கர்நாடகாவில் நடைபெற உள்ள தேர்தலிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். அதை தொடர்ந்து தமிழகத்திலும் நாங்கள் ஆட்சியை அமைப்போம்.
தமிழகத்தில் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கு மோடி அரசு தான் காரணம். காற்றாலையில் ரூ.3.40–க்கு மின்சாரத்தை வாங்கி, மாநில அரசுகளுக்கு குறைந்த விலையில் மத்திய அரசு வழங்கி வருகிறது. சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் எல்லா கட்சிகளின் ஆட்சியையும் மக்கள் பார்த்து விட்டார்கள். இனி எங்களால் தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
மாணவனுக்கு பரிசு
கூட்டத்தில் கோகோ விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த மாணவனுக்கு அவர் பரிசுகள் வழங்கினார். இக்கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை, மாவட்ட பொதுச்செயலாளர் பாலகுருநாதன், மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘ தமிழகத்தில் 40 நீர்நிலை திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதையும், ராமநதி மேல்மட்ட கால்வாய் பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறையிடம் எடுத்துக்கூறி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.

Related Tags :
Next Story