கோவில்பட்டியில் பட்டப்பகலில் துணிகரம் உரக்கடை உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலைவீச்சு
கோவில்பட்டியில் பட்டப்பகலில் உரக்கடை உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் பட்டப்பகலில் உரக்கடை உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
உரக்கடை உரிமையாளர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி– இளையரசனேந்தல் ரோடு டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெருவில் உரக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கிருஷ்ணபிரியா (35). நேற்று காலையில் செந்தில்குமார் வழக்கம்போல் தனது உரக்கடைக்கு புறப்பட்டு சென்றார். கிருஷ்ணபிரியாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், அவர் தனது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
பின்னர் மதியம் அங்கு வந்த 2 மர்மநபர்கள், செந்தில்குமாரின் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு, அவரது வீட்டில் பட்டப்பகலில் திருட திட்டமிட்டனர். அதன்படி செந்தில்குமாரின் வீட்டின் முன்பக்க கதவை ஒரு மர்மநபர் இரும்பு கம்பியால் உடைத்து திறக்க முயன்றார். மற்றொரு மர்மநபர், வீட்டின் வெளியே மொபட்டில் தயாராக இருந்தார்.
15 பவுன் நகைகள் கொள்ளை
வீட்டின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணபிரியா, உடனே இதுகுறித்து தன்னுடைய கணவர் செந்தில்குமாரிடம் செல்போனில் தகவல் தெரிவித்தார். அப்போது செந்தில்குமார் தன்னுடைய மனைவியை வீட்டில் உள்ள ஒரு அறையில் சென்று, கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு இருக்குமாறும், தான் உடனே வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அதன்படி கிருஷ்ணபிரியா தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு இருந்தார். செந்தில்குமார் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு விரைந்து சென்றார். இதற்கிடையே செந்தில்குமாரின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்த மர்மநபர், வீட்டில் உள்ள பீரோவை உடைத்து திறந்து, அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தார்.
ஒருவர் பிடிபட்டார்
இதற்கிடையே செந்தில்குமார் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டின் அருகில் வந்தார். அப்போது அவரது வீட்டின் வாசலில் மொபட்டில் தயாராக நின்ற மர்மநபர், செந்தில்குமாரை கண்டதும் மொபட்டில் வேகமாக தப்பி சென்றார். தொடர்ந்து செந்தில்குமார் தனது வீட்டுக்குள் சென்றார். அப்போது அவரது வீட்டுக்குள் இருந்து வெளியே வேகமாக ஓடி வந்த மற்றொரு மர்மநபர் திடீரென்று இரும்பு கம்பியால் செந்தில்குமாரின் தலையில் பலமாக தாக்கி விட்டு, தப்பி ஓட முயன்றார்.
ஆனாலும் செந்தில்குமார் ‘திருடன்... திருடன்...‘ என்று கூச்சலிட்டவாறு, அந்த மர்மநபருடன் கட்டிப்புரண்டு அவரை பிடிக்க முயன்றார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, அந்த மர்மநபரை மடக்கி பிடித்தனர். வீட்டில் உள்ள அறையில் இருந்த கிருஷ்ணபிரியாவும் வெளியே வந்தார். வீடுபுகுந்து திருடியவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். மேலும் அந்த நபர், செந்தில்குமாரின் வீட்டில் கொள்ளையடித்த 15 பவுன் நகைகளையும் பொதுமக்கள் மீட்டு, செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர்.
2 பேரும் காயம்
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் விருதுநகர் அண்ணாமலை நகரைச் சேர்ந்த பழனிசாமி மகன் அன்பழகன் (வயது 31) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அன்பழகனின் கூட்டாளியான விருதுநகரைச் சேர்ந்த மகாலிங்கத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வீடுபுகுந்து கொள்ளையடித்த அன்பழகன் இரும்பு கம்பியால் தாக்கியதில் தலையில் படுகாயம் அடைந்த செந்தில்குமாருக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோன்று பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த அன்பழகனுக்கும் அதே ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பரபரப்பு
கோவில்பட்டியில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடந்தன. இந்த நிலையில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்தவர் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story