எச்.ராஜா தனது கருத்தை வாபஸ் வாங்கி விட்டார்: பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்தால் சட்டப்படி நடவடிக்கை, அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


எச்.ராஜா தனது கருத்தை வாபஸ் வாங்கி விட்டார்: பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்தால் சட்டப்படி நடவடிக்கை, அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 8 March 2018 4:15 AM IST (Updated: 8 March 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்தால் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அடையாறு,

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தந்தை பெரியார் சிலை தொடர்பாக எச்.ராஜா தெரிவித்த கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. இது கண்டிக்கத்தக்கது. அவர் தனது கருத்தை வாபஸ் வாங்கி விட்டார். அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. இது பெரியார் மண். இந்த மண்ணில் காழ்ப்புணர்ச்சியோடு விஷ வதந்திகளை தூவும் செயலை அ.தி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது.

தமிழ்நாடு அமைதி தழுவிய மாநிலம். இந்த மாதிரியான செயலை வேரோடு வேராக அறுப்போம். பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எந்த கொம்பனாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துவோம். அது ராஜாவாக இருந்தாலும் சரி, ராஜா வீட்டு பிள்ளையாக இருந்தாலும் சரி சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

வழக்கு தொடுத்தாலும் வாபஸ் பெறப்பட்டது என்று கூறுவார்கள். சிலையை பாதுகாக்கும் நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. எனக்கு கபடம் தெரியாது. அதனால்தான் அனை வரும் என்னை விமர்சிக்கிறார்கள்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தற்கொலை சம்பவம் ஆரம்பக்கட்ட விசாரணையில் உள்ளது. சொந்த காரணங்களுக்காக தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதற்கு அரசு பொறுப்பு ஏற்க முடியாது. இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பிறகே இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story