எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க.-விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க.-விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவரது படத்தை தி.மு.க.வினர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்,
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல, தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் எச்.ராஜா தனது முகநூலில் பதிவிட்ட கருத்து தொடர்பாக வருத்தம் தெரிவிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எச்.ராஜாவை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கரூரில் திருமாநிலையூர் ரவுண்டானாவில் மாவட்ட தி.மு.க. சார்பில் எச்.ராஜாவை கண்டித்தும், திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அனைவரும் கலைந்து செல்ல தயராக நின்றனர். அப்போது தி.மு.க. நிர்வாகிகள் சிலர் வெள்ளைத்தாளில் எச்.ராஜாவின் படத்தை பென்சிலால் வரைந்து, அவரது பெயரை எழுதியும் தீயிட்டு கொளுத்தினர். மேலும் அவரை கண்டித்து கோஷம் எழுப்பினர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர். எச்.ராஜா படம் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி
இதேபோல எச்.ராஜாவை கண்டித்து கரூர் மனோகரா கார்னர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story