குளித்தலை, கடவூரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


குளித்தலை, கடவூரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 March 2018 11:00 PM GMT (Updated: 7 March 2018 7:45 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலை, கடவூரில் ஊரக வளர்ச்சி துறைஅலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குளித்தலை,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். தனி அலுவலர் காலத்திய செலவினங்களை உரிய அலுவலர்களை தாண்டி மற்றவர்களை கொண்டு ஆய்வு செய்வதை கைவிடவேண்டும், வரிவசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் ஊராட்சி செயலாளர்களின் பணிகள் பாதிக்கும் வகையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஊராட்சி செயலாளர்களை பயிற்சிக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேபோலகடவூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். நிர்வாகி ஜெயராமன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். முடிவில் துணை வட்டார அலுவலர் சையத் நன்றி கூறினார். 

Next Story