எச்.ராஜா கருத்துக்கு கண்டனம் தெரிவித்து காரைக்குடியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்ற எச்.ராஜாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து காரைக்குடியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி
திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது போன்று, தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைத்து அகற்றப்படும் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்தார். இந்த கருத்து பல்வேறு தரப்பினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் எச்.ராஜா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காரைக்குடியில் எச்.ராஜா கருத்துக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட பொருளாளர் சுப.துரைராஜ், சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப.முத்துராமலிங்கம், மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், நகர செயலாளர் குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஆதிகண்ணத்தாள், திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி, மாநில பேச்சாளர் பிராட்லா மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, காமராஜர் கக்கன் பேரவை உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story