சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்ட விவகாரம் முதல்–மந்திரி சித்தராமையா விளக்கம் அளிக்க வேண்டும்


சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்ட விவகாரம் முதல்–மந்திரி சித்தராமையா விளக்கம் அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 March 2018 4:35 AM IST (Updated: 8 March 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு சிக்கலசந்திராவில் நேற்று ஜனதாதளம்(எஸ்) மாநில தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–

பெங்களூரு,

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் சென்னப்பட்டணா தொகுதிகளில் என் குடும்ப உறுப்பினர்கள் போட்டியிட மாட்டார்கள். மீறி யாரேனும் போட்டியிட்டால் நானே போட்டியில் இருந்து விலகி கொள்வேன். சிறுசிறு வி‌ஷயங்களை குற்றச்சாட்டுகளாக தொண்டர்கள் கூற வேண்டாம். கட்சி மீதான குற்றச்சாட்டுகளை போக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது உண்மை தான்.

அசோக் கேனி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து உள்ளதன் மூலம் பா.ஜனதா பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுகிறது. அசோக் கேனிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்தவர் தான் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா. காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் மாநில சொத்துகளை பாதுகாக்க தவறிவிட்டனர். மாறாக மாநில சொத்துக்களை அவர்கள் திருடுகிறார்கள்.

பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முதல்–மந்திரி சித்தராமையா விளக்கம் அளிக்க வேண்டும். ஒருவேளை, சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க சித்தராமையா அறிவுறுத்தி இருந்தால் அதற்கும் சித்தராமையாவே பொறுப்பு. மாநிலத்தில் அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஏழைகளுக்கு ஒரு நியாயம், பணக்காரர்களுக்கு ஒரு நியாயமா?.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story