2018-19-ம் ஆண்டுக்கான மராட்டிய அரசின் பட்ஜெட் இன்று தாக்கல்


2018-19-ம் ஆண்டுக்கான மராட்டிய அரசின் பட்ஜெட் இன்று தாக்கல்
x
தினத்தந்தி 9 March 2018 4:32 AM IST (Updated: 9 March 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

2018-19-ம் ஆண்டுக்கான மராட்டிய அரசு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

மும்பை,

மராட்டியத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரின் போது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி தற்போது நடந்து வரும் சட்டசபை கூட்டத்தில் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது.

நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்கிறார். இதையொட்டி நேற்று சுதீர் முங்கண்டிவாரும், நிதித்துறை இணை மந்திரி தீபக் கேசர்கரும் பட்ஜெட் உரைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

மராட்டியத்தில் விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக மாநில அரசு பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவித்தது. இருப்பினும் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி கேட்டு சுமார் 25 ஆயிரம் விவசாயிகள் நாசிக்கில் இருந்து மும்பை சட்டசபை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், இன்று தாக்கலாகும் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வழக்கம் போல் விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என தெரிகிறது. அதே நேரத்தில் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகுமா? என்பதை விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். 

Next Story