எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 March 2018 5:20 AM IST (Updated: 9 March 2018 5:20 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

பெரியார் சிலையை உடைப்போம் என்று கருத்து வெளியிட்ட பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க., ம.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் சார்பிலும், அமைப்புகள் சார்பிலும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், எச்.ராஜாவின் உருவபொம்மையை தீயிட்டு எரித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், எச்.ராஜாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் குண்டா என்கிற சார்லஸ் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் தமிழ், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி துணை செயலாளர் ரமேஷ்கர்ணா, ராணிப்பேட்டை தொகுதி துணை செயலாளர் ஆயிலம் பிரபு உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Next Story