ஊட்டியில் தனியார் தேயிலை தொழிற்சாலையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து
ஊட்டியில் தனியார் தேயிலை தொழிற்சாலையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1½ கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி கோரிசோலாவில் குன்னூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை உள்ளது. இது 2 மாடிகளை கொண்டது. இந்த தொழிற்சாலை இரும்பு தூண்களால் ஆன கட்டிடம் ஆகும். இதன் மேற்கூரை தகரத்தால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தேயிலை தொழிற்சாலையில் பலவகையான தேயிலைத்தூள் தயாரிக்கப் படுகிறது.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த தொழிற்சாலையில் தேயிலைத்தூள் உற்பத்தி செய்வதை நேரடியாக காண்பதுடன், அங்கு வழங்கப்படும் தேநீரை குடித்து பார்த்து தேயிலைத்தூளை வாங்கி செல்கின்றனர். அதற்காக தொழிற்சாலையின் ஒரு பகுதியில் தேயிலைத்தூள் விற்பனை மையமும் இயங்குகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் தேயிலை தொழிற்சாலையின் ஒரு பகுதியில் எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென மேல் மாடிகளுக்கும் பரவியது.தொடர்ந்து தொழிற்சாலை முழுக்க தீ பற்றி எரிந்தது.
இதுபற்றி தகவலறிந்து 3 வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். தீ மளமளவென பற்றி எரிந்ததால், அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. அதனை தொடர்ந்து 4 தனியார் தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டன. சுமார் 3 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட தரைப்பகுதியில் பச்சை தேயிலைத்தூள் உற்பத்தி செய்யும் பகுதி, முதல் மாடியில் சாக்லேட் உற்பத்தி செய்யும் பகுதி, 2-வது மாடியில் தோல் மற்றும் கம்பளி ஆடைகள் விற்பனை செய்யும் பகுதி செயல்பட்டு வந்தன. இந்த 3 பகுதிகளும் தீயில் எரிந்ததில் அங்கிருந்த பொருட்கள் நாசமாயின.கட்டிடத்தின் சுவர்கள் இடிந்ததில் இரும்பு தூண்கள் வளைந்தன.மேற்கூரை தகரம் பெயர்ந்து தொங்கியது. எந்திரங்களும் சேதம் அடைந்தன.மேலும் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 3 ஆயிரம் கிலோ பச்சை தேயிலைத்தூள் எரிந்து நாசமானது. இந்த பயங்கர தீ விபத்தில் சேதமான பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என்று தொழிற்சாலை மேலாளர் வரதராஜன் தெரிவித்தார்.
மின்சார கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது பச்சை தேயிலையை தூளாக்கும் செயற்கை அடுப்பு மூலம் தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து ஊட்டி நகர மத்திய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story