விழுப்புரத்தில் எச்.ராஜாவை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்


விழுப்புரத்தில் எச்.ராஜாவை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 March 2018 4:15 AM IST (Updated: 10 March 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் எச்.ராஜாவை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எச்.ராஜாவின் உருவ பொம்மையையும் தீ வைத்து எரித்தனர்.

விழுப்புரம்,

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, தனது முகநூல் பதிவில் தந்தை பெரியாரின் சிலையை உடைப்போம் என்று கூறியுள்ளார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எச்.ராஜாவை கண்டித்தும், அவரை கைது செய்யக்கோரியும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வக்கீல்கள், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெரியாரை அவமதித்த எச்.ராஜாவை கண்டித்தும், அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

இதை தொடர்ந்து எச்.ராஜாவின் உருவபொம்மையை வக்கீல்கள் தீ வைத்து எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி அணைத்து அப்புறப்படுத்தினர். பின்னர் வக்கீல்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச்செய்தனர். இதேபோல் உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் முன்பும் வக்கீல்கள், எச்.ராஜாவை கண்டித்து அவரது உருவபொம்மையை தீ வைத்து எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர். 

Next Story