தமிழகத்தில் அன்புமணி ராமதாசால் மட்டுமே நல்லாட்சி கொடுக்க முடியும்


தமிழகத்தில் அன்புமணி ராமதாசால் மட்டுமே நல்லாட்சி கொடுக்க முடியும்
x
தினத்தந்தி 10 March 2018 5:08 AM IST (Updated: 10 March 2018 5:08 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அன்புமணி ராமதாசால் மட்டுமே நல்லாட்சி கொடுக்க முடியும் என்று மேட்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

மேட்டூர்,

மேட்டூர் சதுரங்காடியில் நேற்று பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கண்ணையன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜி.கே.மணி, துணை தலைவர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் ஆட்சி செய்பவர்கள் மக்கள் வாழ்க்கையை பற்றி கவலை படாமல், தங்களது குடும்பத்திற்கு சொத்து சேர்ப்பதிலேயே குறியாக உள்ளனர். மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக ஜி.கே.மணி இருந்தபோது, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காமல், தொகுதி மக்களுக்காக 24 மணி நேரமும் உழைத்தார். அதனால் தான் 9-வது முறையாக அவரை பா.ம.க.வின் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளோம். ஆனால் நீங்கள் ரூ.100, ரூ.200-க்கு ஆசைப்பட்டு தேர்தலில் அவரை தோற்கடித்துவிட்டீர்கள். இதனால் உங்கள் தொகுதி ஒரு நல்ல எம்.எல்.ஏ.வை இழந்துள்ளது.

தமிழகத்தில் டாக்டர் அன்புமணி ராமதாசால் மட்டுமே நல்லாட்சியை கொடுக்க முடியும். அவர் ஆட்சியில் அமர்ந்தால் தான் தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

Next Story