வண்டல் மண் அள்ளுவது தொடர்பாக மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதிகளில் பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் ஆய்வு


வண்டல் மண் அள்ளுவது தொடர்பாக மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதிகளில் பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் ஆய்வு
x
தினத்தந்தி 11 March 2018 3:45 AM IST (Updated: 11 March 2018 7:01 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதிகளில் படிந்துள்ள வண்டல் மண் அள்ளுவது தொடர்பாக பொதுப்பணித்துறையின் முதன்மை தலைமை பொறியாளர் நேற்று ஆய்வு நடத்தினார்.

சேலம், 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு குறைந்த போது மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப்பகுதிகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை அள்ளி விவசாய நிலங்களை மேம்பாடு செய்யும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2 லட்சத்து 9 ஆயிரம் கன மீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததால் வண்டல் மண் அள்ளும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நடப்பாண்டில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது.

அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை மீண்டும் அள்ளுவது தொடர்பாக ஆய்வு செய்ய பொதுப்பணித்துறையின் முதன்மை தலைமை பொறியாளர் பக்தவச்சலம், தலைமை பொறியாளர் வைரவநாதன் ஆகியோர் நேற்று மேட்டூருக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் தமிழக-கர்நாடக எல்லையான பாலாறு, கோட்டையூர், பண்ணவாடி, மூலக்காடு ஆகிய நீர்த்தேக்க பகுதிகளில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுப் பணித்துறையின் மேட்டூர் அணை கோட்ட பொறியாளர் சுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் வசந்தன், உதவி பொறியாளர் மதுசூதனன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story