முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி
சதாசிவ கமிட்டியின் அறிக்கையை அமல்படுத்த வலியுறுத்தி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிராக தலித் அமைப்பினர் கருப்பு கொடி காட்ட முயன்றனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
துமகூரு,
துமகூரு மாவட்டம் கொரட்டகெரேயில் நேற்று மதியம் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்ற பகுதிக்கு அருகே சதாசிவ கமிட்டி அரசிடம் வழங்கியுள்ள அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அப்போது அவர்கள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிராகவும், கர்நாடக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். உடனே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டார்கள்.
அதே நேரத்தில் சதாசிவ கமிட்டி அறிக்கையை அமல்படுத்தாமல் இருக்கும் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவோம் என்று போராட்டக்காரர்கள் கூறினார்கள். மேலும் முதல்-மந்திரி சித்தராமையா வரும் நேரத்தில், கருப்பு கொடி காட்டவும் போராட்டக்காரர்கள் தயாரானார்கள். இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் நாலாபுறமும் அவர்கள் சிதறி ஓடினார்கள்.
பின்னர் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்றதாக 30-க்கும் மேற்பட்டோரை கைது செய்து, அங்கிருந்து வாகனத்தில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றார்கள். இந்த சம்பவம் துமகூருவில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story