ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மர்ம சாவு கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
ஜெயங்கொண்டத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாரியங்காவல்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 60). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி வசந்தா (54). இவர்களுக்கு சாமிநாதன் (24) என்ற மகனும், ரஞ்சினி (28), ரமணி (26) என இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
அன்பழகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜெயங்கொண்டம் வேலாயுதநகர் 9-வது குறுக்குத்தெருவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வந்தார். அந்த வீட்டில் செந்துறை அருகே உள்ள சேடக்குடிகாடு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டு வேலைகளை செய்து கொண்டு, அன்பழகனுக்கு துணையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை அன்பழகன், வீட்டின் கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக, அவரது மனைவி வசந்தாவிற்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் அங்கு விரைந்து வந்து, தனது கணவர் உடலை பார்த்து கதறி அழுதார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டின் முன்பு திரண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அன்பழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வசந்தா, ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து, அன்பழகன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்தனரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே அன்பழகன் வீட்டில் தங்கி இருந்த பெண் தலைமறைவாகி விட்டார். அந்த பெண்ணையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர் சிக்கினால் அன்பழகன் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story