சூறாவளி காற்று எச்சரிக்கை: கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர்
காற்றழுத்த தாழ்வு நிலையால் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 250–க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் அவசர, அவசரமாக குளச்சலுக்கு கரை திரும்பினர்.
குளச்சல்,
இலங்கை அருகே இந்திய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக குமரி கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், தூத்தூர் உள்ளிட்ட 48 கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட் டது. இதுதொடர்பாக குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு அதிகாரிகள் நேரடியாக சென்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், வள்ளங்கள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் 10 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடிப்பார்கள். கட்டுமர மீனவர்கள் அதிகாலையில் கடலுக்கு சென்று மாலையில் கரை திரும்புவார்கள்.
இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதையொட்டி மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் குளச்சலில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பி கொண்டிருக்கிறார்கள். நேற்று சுமார் 250–க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே கைவிட்டு விட்டு கரை திரும்பினர். இதில் குறிப்பிட்ட சில விசைப்படகில் கேரை மீன்கள் இருந்தன. பெரும்பாலான விசைப்படகுகள் மீன்கள் எதுவும் இல்லாமல் வெறுமையாக கரை திரும்பின.
இதற்கிடையே கரை திரும்பிய விசைப்படகுகள், கட்டுமரம், வள்ளங்களை மீனவர்கள் கடற்கரையில் இருந்து பாதுகாப்பாக மேடான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். இதற்கிடையே குமரி மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் பலத்த காற்று வீசியது.

Related Tags :
Next Story