இந்திய எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது
இந்திய எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை, இந்திய கடலோர காவல்படையினர் நேற்று கைது செய்தனர்.
காரைக்கால்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நேற்று அதிகாலை இந்திய கடலோர காவல் படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இந்திய எல்லைக்குட்பட்ட நடுக் கடலில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற விசைப்படகு ஒன்றை ஆய்வு செய்தனர். அப்போது அந்த படகில் இலங்கை மீனவர்கள் 5 பேர் இருப்பது தெரிய வந்தது.
இந்திய கடலோர காவல் படையினர் இலங்கை மீனவர்களிடம் நடத்திய விசாரணையில், காற்றின் வேகத்தில் திசைமாறி வந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து படகில் இருந்த ரணில்(வயது 38), அருண்(32), டிலான் மதுரங்கன், தனுஸ்கர்(21), மதுராங்க(24) ஆகிய 5 இலங்கை மீனவர்களையும் கைது செய்து மாலையில் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
ஒப்படைப்பு
துறைமுகத்தில் இந்திய கடலோர காவல்படையினர் மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்தி வேதாரண்யம் கடலோர காவல் படையினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Related Tags :
Next Story