மாவட்ட செய்திகள்

பெண்ணின் செல்போனுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய பக்கத்து வீட்டுக்காரர் கைது + "||" + Porn Video Sender arrested

பெண்ணின் செல்போனுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய பக்கத்து வீட்டுக்காரர் கைது

பெண்ணின் செல்போனுக்கு
ஆபாச வீடியோ அனுப்பிய பக்கத்து வீட்டுக்காரர் கைது
பெண்ணின் செல்போனுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,

மும்பை நாக்பாடாவை சேர்ந்த 32 வயது பெண் தனது கணவர் மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முகமது செய்யது (வயது39). கட்டுமான தொழிலாளியாக உள்ளார். இவர் சம்பவத்தன்று மேற்படி பக்கத்து வீட்டுபெண்ணின் செல்போனுக்கு, ‘ஒரு மனிதனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தால், அவர்கள் சண்டையிட்டு கொண்டிருந்தால் இந்த வழியில் பிரச்சினையை தீர்க்கலாம்' என்ற வாசகத்தை குறிப்பிட்டு அதனுடன் ஆபாச வீடியோ ஒன்றை அனுப்பி வைத்து இருக்கிறார்.

கைது

இதை பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைந் தார்.உடனே தனது கணவரிடம்இதுபற்றி தெரிவித்து வீடியோவை காண்பித்தார். மேலும் ஆத்திரம் அடைந்த அந்த பெண் முகமது செய்யதுவை கண்டித்தார். இந்தநிலையில், சம்பவம் குறித்து நாக்பாடா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது செய்யதுவை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. ஆபாச வீடியோ உள்ளதாக மிரட்டல் - ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய இன்னொரு நடிகை
ஆபாச வீடியோ உள்ளதாக, ஸ்ரீரெட்டியிடம் இன்னொரு நடிகை சிக்கிக்கொண்டார்.
2. ஆபாச வீடியோவை வெளியிடுவதாக பெண் என்ஜினீயருக்கு மிரட்டல்
ஆபாச வீடியோவை வெளியிடுவோம் என காதல் கணவரின் பெற்றோர் மிரட்டுவதாக பெண் என்ஜினீயர் திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை