பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி காப்பீட்டு கழக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி தஞ்சையில் காப்பீட்டு கழக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு மழையில் நனைந்தபடி கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்,
விடுபட்டு போன விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி தஞ்சை அண்ணாசிலை சாலையில் உள்ள நியூ இந்தியா காப்பீட்டு கழக அலுவலகத்தை காவிரி உரிமை மீட்புக்குழுவினர் நேற்றுகாலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு சமவெளி விவசாயிகள் சங்க தலைவரும், காவிரி உரிமை மீட்புக்குழு நிர்வாகியுமான பழனிராஜன் தலைமை தாங்கினார். காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், மாவட்ட செயலாளர் ஜெகதீசன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், தமிழ் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் வைகறை, காவிரி உரிமை மீட்புக்குழு நிர்வாகிகள் கலைசெல்வன், பழ.ராசேந்திரன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டம் நடைபெற்றபோது திடீரென மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடியே விவசாயிகள் அனைவரும் மத்தியஅரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
விவசாயிகள் யாரும் காப்பீட்டு கழக அலுவலகத்திற்குள் நுழைந்துவிடாமல் இருப்பதற்காக இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தமிழ்ச்செல்வன், ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் அலுவலகத்திற்குள்ளேயும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கியமான நிர்வாகிகள் 5 பேரை நியூ இந்தியா காப்பீட்டு கழக உதவி மேலாளர் பாண்டியன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது இன்னும் 1 வாரத்திற்குள் பயிர்க் காப்பீட்டு தொகையை விடுபட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விடுபட்டு போன அனைவருக்கும் இன்னும் 1 மாதத்திற்குள் பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி மேலாளர் உறுதி அளித்தார். இந்த உறுதியை ஏற்று விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முன்னதாக சமவெளி விவசாயிகள் சங்க தலைவர் பழனிராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–
தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளில் 50 சதவீதம் பேருக்கு பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 சதவீத விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. விடுபட்டு போன விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க கோரி நியூ இந்தியா காப்பீட்டு கழக சென்னை மண்டல மேலாளரை நேரில் சந்தித்து முறையிட்டோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் முற்றுகை போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த மாதத்திற்குள் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என்றால் அதன்பிறகு கிடைக்க வாய்ப்பு இல்லை. விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகையை வழங்காமல் இழுத்தடிப்பது மோசடியாகும். இன்னும் 1 வாரத்திற்குள் காப்பீட்டு தொகையை வழங்கவில்லை என்றால் சென்னை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.

Related Tags :
Next Story