டாஸ்மாக் ஊழியரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
திருக்குவளையில் டாஸ்மாக் ஊழியரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் கீழையூரை அடுத்த தொழுதூர் புதுத்தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது48). இவர் வேளாங்கண்ணி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஈசனூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற போது, இவருக்கு பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் திடீரென வசந்தகுமாரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த வசந்தகுமார் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று தொழுதூர் கிராமத்தைசேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், வசந்தகுமாரை தாக்கியவர்களை உடனே கைது செய்யக்கோரி திருக்குவளை தாசில்தார் அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தொழுதூர் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் தலைமை தாங்கினார். இதில் தொழுதூர் கிராமத்தை சேர்ந்த திராளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக் ஊழியர் வசந்தகுமார் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். குற்றவாளிகள் மீது கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப் பட்டன.

Related Tags :
Next Story