சீரான குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்
நாமக்கல்லில் சீரான குடிநீர் கேட்டு, 2-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் நகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட முதலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நகராட்சி அலுவலகத்திற்கு நேற்று காலிக்குடங்களுடன் வந்து ஆணையாளர் பாலசுப்பிரமணியனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
முதலைப்பட்டிபுதூர் பகுதியில் சுமார் 300 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள பெரும்பாலான குடிநீர் இணைப்புகளுக்கு கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப் படுவதில்லை.
ஆனால் சில வீடுகளுக்கு மட்டும் பல மணி நேரம் தண்ணீர் வருகிறது. மேலும் சிலர் தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சுகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் இதை கண்காணித்து, அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மேடான பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story