குளச்சல் அருகே செல்போன் கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு


குளச்சல் அருகே செல்போன் கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 15 March 2018 3:45 AM IST (Updated: 14 March 2018 10:37 PM IST)
t-max-icont-min-icon

குளச்சல் அருகே செல்போன் கடையில் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது. இதுதொடர்பாக கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குளச்சல்,

குளச்சல் அருகே ரீத்தாபுரத்தை அடுத்த கடம்பரவிளையை சேர்ந்தவர் வர்க்கீஸ். இவருடைய மகன் சஜின் (வயது 31). இவர், அப்பகுதியில்  செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் கடையை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தார். அப்போது, கடையில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, மேஜையில் வைத்திருந்த ரூ.47 ஆயிரத்து 500–ம், 2 செல்போன்களும் திருடப்பட்டு இருந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து மேஜையில் வைத்திருந்த பணத்தையும், செல்போன்களையும் திருடி சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து சஜின் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராமன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருட்டு நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அதில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கொண்டு போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.

Next Story