கடலூரில் மத்திய தொழிற்சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
கடலூரில் மத்திய தொழிற்சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூர்,
மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் சி.சுகுமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பாஸ்கரன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட கவுன்சில் தலைவர் பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொ.மு.ச. மாவட்ட தலைவர் பழனிவேல், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட கவுன்சில் பொதுச்செயலாளர் ஜி.சுகுமார், ஏ.ஐ.யு.டி.யு.சி. மாவட்டக்குழு சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை பங்கு விற்பனையை மத்திய அரசு கைவிட வேண்டும். நிரந்தர தன்மை கொண்ட பணிகளில் ஒப்பந்த முறையை புகுத்தாதே, தொழிலாளர் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்துவதை கைவிட வேண்டும். சம வேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கோரிக்கை அட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story