பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 March 2018 4:30 AM IST (Updated: 16 March 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி நாகையில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நடராசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், புள்ளியியல் துறை அலுவலர் சங்க பொதுச்செயலாளர் அந்துவன்சேரல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஊழியர் சங்கத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன், நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை உடனடியாக பெற்று காலதாமதமின்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.

1.1.2016 முதல் வழங்க வேண்டிய 21 மாத நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். அனைவருக்கும் பொங்கல் போனஸ் உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். மாதந்தோறும் மருத்துவப்படி ரூ. ஆயிரம் வழங்க வேண்டும். ஊதியக்குழு குறைபாடுகளை களைவதற்கு அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்.

மின்வாரியம், போக்குவரத்து, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஆகியவற்றில் பணி புரிந்து ஓய்வுபெற்றவர் களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். 8-வது ஊதியக்குழு பரிந் துரைகளை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங் கள் எழுப்பப்பட்டன. இதில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். 

Next Story