எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 16 March 2018 3:30 AM IST (Updated: 16 March 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது.

வேலூர், 

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வேலூர் மாவட்டத்தில் 219 மையங்களில் 51 ஆயிரத்து 942 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களை கண்காணிக்கவும், காப்பியடிப்பவர்களை பிடிக்கவும் 400 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு அறையை கண்காணிக்க 3 ஆயிரத்து 500 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் டான்போஸ்கோ பள்ளியில் தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. துணை கண்காணிப்பாளர் புஷ்பா முன்னிலை வகித்தார்.

முதன்மை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமை தாங்கி பேசுகையில், ‘தேர்வு அறைக்கு வரும் மாணவர்களை முழுவதுமாக பரிசோதித்து உள்ளே அனுமதிக்க வேண்டும், மாணவர்களுக்கு விடைத்தாள், வினாத்தாள் உரிய நேரத்தில் வழங்க வேண்டும். மேலும் அதில் மாணவர்கள் பெயர், புகைப்படம், பிறந்த தேதி உள்ளிட்டவைகள் சரியாக உள்ளதா? என்று சரிபார்க்க வேண்டும். தவறாக இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளை எந்த வகையிலும், மன உளைச்சலுக்கு உள்ளாக்க கூடாது’ என்றார்.

கூட்டத்தில் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story