மார்த்தாண்டம் நேசமணி பாலத்தில் சாலை சீரமைப்பு
மார்த்தாண்டம் நேசமணி பாலத்தில் சாலை சீரமைக்கப்பட்டது.
குழித்துறை,
மார்த்தாண்டம்–ஞாறான்விளை சாலையில் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே நேசமணி பாலம் உள்ளது. இந்த பாலம் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிர்வடைகிறது. மேலும் இந்த பாலத்தில் மார்த்தாண்டத்தில் இருந்து ஞாறான்விளை செல்லும் நுழைவு பகுதியில் சாலையின் குறுக்கே பெரிய வெடிப்பு ஏற்பட்டு இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் இருந்ததுடன், பாலத்தில் ஆங்காங்கே பல பகுதிகளில் சாலை சேதமடைந்து காணப்பட்டது.
அவற்றை பழுது பார்த்து, பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யுமாறு தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
சீரமைப்பு
இந்தநிலையில் பாலத்தில் சேதமடைந்த பகுதியில் தார் போட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. இதோடு நிறுத்திக்கொள்ளாமல் பாலத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்யுமாறும், தேவைப்பட்டால் பாலத்தின் அடிப்பகுதியில் ராட்சத இரும்பு தூண்கள் அமைத்து தாங்குதல் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story