குமரி மாவட்டத்தில் மழை: பேச்சிப்பாறை பகுதியில் 27.4 மில்லி மீட்டர் பதிவு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


குமரி மாவட்டத்தில் மழை: பேச்சிப்பாறை பகுதியில் 27.4 மில்லி மீட்டர் பதிவு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 19 March 2018 4:30 AM IST (Updated: 18 March 2018 10:20 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக பேச்சிப்பாறை பகுதியில் 27.4 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது.

நாகர்கோவில்,

இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குமரி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினமும் பரவலாக மழை பெய்தது.

இதில் அதிக பட்சமாக பேச்சிப்பாறை பகுதியில் 27.4 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதே போல் மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:–

நாகர்கோவில்– 10, கோழிப்போர்விளை– 18.2, ஆரல்வாய்மொழி– 9.5, பாலமோர்– 8, முள்ளங்கினாவிளை– 9, புத்தன்அனை– 8.4 என்ற அளவில் பதிவாகியிருந்தது. அணைப்பகுதிகளில் பெருஞ்சாணி– 8, சிற்றார் 1– 8 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்தது. ஆனால் தற்போது வினாடிக்கு 331 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதேபோல் மாவட்டத்தின் மற்றொரு முக்கிய அணையான பெருஞ்சாணி அணைக்கு 18 கனஅடி தண்ணீர் வருகிறது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 653 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

மேலும் குமரியின் குற்றாலம் என்று வர்ணிக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாக கொட்டியது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்புக்கு படை எடுத்தனர். அவர்கள் அருவியிலும், அங்குள்ள நீச்சல் குளத்திலும் குளித்து மகிழ்ந்தனர். அதோடு அருவிக்கு மேல் உள்ள ஆற்றில் படகு சவாரியும் சென்று உற்சாகம் அடைந்தனர்.

Next Story