சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம் அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவிலில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதற்காக மணமகன், மணப்பெண் வீட்டார் மற்றும் உறவினர்கள் மண்டபத்தில் திரண்டனர். மண்டபத்தை அலங்கரித்து சுற்றிலும் திருமண பேனர்களும் வைக்கப்பட்டு இருந்தன.
ஆனால் மணப்பெண்ணுக்கு 18 வயது நிரம்பவில்லை என்றும், 18 வயது பூர்த்தியடையாத பெண்ணுக்கு திருமணம் நடப்பதாகவும் சமூக நலத்துறை அதிகாரி மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
அதன் பேரில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆன்டனி ஜெகதா மற்றும் சுஜி உள்ளிட்ட போலீசார், சமூக நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் அதிரடியாக மண்டபத்துக்குள் சென்று விசாரித்தனர். அப்போது மணக்கோலமிட்டு இருந்த பெண்ணுக்கு இன்னும் 18 வயது பூர்த்தியடையவில்லை என்பதும், அவர் 18 வயதை அடைய இன்னும் ஒரு மாதம் இருப்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் மண்டபத்தில் திரண்டிருந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். ஆனால், 18 வயது நிரம்பாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க கூடாது என்று அதிகாரிகள் உறுதியாக கூறினர்.
அதைத் தொடர்ந்து திருமணம் நின்றது. போலீசார் மற்றும் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story