இரணியல் சந்திப்பில் பா.ஜனதா, இந்து முன்னணி கொடிகள் சேதம் போலீசார் விசாரணை


இரணியல் சந்திப்பில் பா.ஜனதா, இந்து முன்னணி கொடிகள் சேதம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 March 2018 3:45 AM IST (Updated: 18 March 2018 10:30 PM IST)
t-max-icont-min-icon

இரணியல் சந்திப்பில் பா.ஜனதா, இந்து முன்னணி கொடிகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

அழகியமண்டபம்,

இரணியல் சந்திப்பில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் உள்ளன. இங்கு பா.ஜனதா மற்றும் இந்து முன்னணியின் கொடி கம்பமும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென அப்பகுதியில் நின்ற பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி கம்பங்களில் கட்டப்பட்டிருந்த கொடியை சேதப்படுத்தினர்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சத்தம் போட்டனர். உடனே மர்ம நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள்களில் தப்பி ஓடி விட்டனர்.

மர்ம நபர்களுக்கு          வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. பா.ஜனதா கட்சியின் இரணியல் பேரூர் தலைவர் ராஜேஷ், பொதுச்செயலாளர் விஷ்ணு ஆகியோர் நேற்று இரணியல் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுதேசன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்ற£ர்.

Next Story