தர்மபுரி மாவட்டம் முழுவதும் ரூ.20.47 கோடி மதிப்பில் புதிய தார்சாலைகள் அமைச்சர் தகவல்
தர்மபுரி மாவட்டம் முழுவதும் ரூ.20.47 கோடி மதிப்பில் 80 புதிய தார்சாலைகள் அமைக்க நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் ஆலாபுரம், இருளப்பட்டி, பி.பள்ளிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 45 லட்சம் மதிப்பில் 8.16 கிலோ மீட்டர் தூரம் புதிய தார்சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிக்கான பூமிபூஜை விழா கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், உதவி கலெக்டர்கள் ராமமூர்த்தி, பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு தார்சாலை அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 126.12 கிலோ மீட்டர் தூரத்திற்கு 80 தார்சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.20 கோடியே 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் 6 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று அவர் கூறினார்.
முன்னதாக தர்மபுரி வட்டம் திப்பிரெட்டிஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் ஆலாபுரம், எச்.புதுப்பட்டி ஆகிய இடங்களில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் புதிய கால்நடை கிளை நிலையங்களை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்து குத்துவிளக்கேற்றினார். அப்போது அவர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் பாறைக்கொட்டாய், திப்பம்பட்டி, கடமடை, திப்பிரெட்டிஅள்ளி, எச்.புதுப்பட்டி, ஆலாபுரம் மற்றும் பேகாரஅள்ளி ஆகிய 7 இடங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. என்.குப்புசாமி, அரசு வக்கீல் பசுபதி, தாசில்தார் சரவணன், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, நல்லதம்பி, சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மதலைமுத்து, மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கால்நடை பராமரிப்புதுறை உதவி இயக்குனர் வேடியப்பன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story