மோட்டார்சைக்கிளில் சென்ற ஓட்டல் தொழிலாளி பலி வேன் மோதியது
குடவாசல் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற ஓட்டல் தொழிலாளி வேன் மோதி பரிதாபமாக பலியானார்.
குடவாசல்,
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள அன்னியூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது53). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் அன்னியூரில் இருந்து வடமட்டத்துக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அன்னியூர் பகுதியில் உள்ள ஒரு மதகில் சென்றபோது எதிரே தனியார் பள்ளி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் விழுந்த ஜெயராமன் வேனின் சக்கரங்களுக்கு இடையே சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கோனேரிராஜபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
வலைவீச்சு
ஆனால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் வழியிலேயே ஜெயராமன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெயராமனின் மனைவி முத்துலட்சுமி எரவாஞ்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story