டாஸ்மாக் கடைக்கு மகளிர் சுய உதவிக்குழுவினர் எதிர்ப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு
டாஸ்மாக் கடைக்கு மகளிர் சுய உதவிக்குழு வினர் எதிர்ப்பு தெரிவித்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
கரூர்,
கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் அரவக்குறிச்சி தாலுகா புன்னம் கிராமத்தை சேர்ந்த பழமாபுரம் காலனியை சேர்ந்த பொதுமக்கள் பலர் காலிக்குடங்களுடன் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்கள் பகுதிக்கு காகித ஆலை மூலம் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது குடிநீர் வினியோகம் சீராக இல்லை. குடிநீர் பற்றாக்குறையால் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டிய நிலை உள்ளது.
பஞ்சாயத்து சார்பில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கூட கட்டவில்லை. எங்களது பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருக்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் குடிநீர் வினியோகிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
கரூர் மாவட்டத்தில் குடிநீர் ஆதாரங்களில் சாயக்கழிவுகள் கலக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தியும், இதுதொடர்பாக அடுத்த வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில் தெரிவித்திருந்தனர்.
புலியூர், பி.வெள்ளாளப் பட்டி, அமராவதி நகரை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் பொதுமக்கள் அதிகம் குடியிருக்க கூடிய இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க பணி நடந்து வருவதாகவும், ஏற்கனவே கரூர்-திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள 2 டாஸ்மாக் கடைகளால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிற நிலையில் கூடுதலாக ஒரு டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்காமல் தடுத்த நிறுத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
அம்பேத்கர் மக்கள் நல சங்கத்தினர் கொடுத்த மனுவில், செருப்பு தைக்கும் தொழிலாளிகளுக்கு நிதி உதவி கொடுக்க முன்னாள் கலெக்டர் ஏற்பாடு செய்திருந்ததாகவும், அதன்படி முதல் கட்டமாக 25 பேருக்கு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர். கூட்டத்தில் மொத்தம் 274 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற கலெக்டர் அன்பழகன் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுகொடுக்க வந்தவர்களின் எண்ணிக்கை நேற்று குறைந்து காணப்பட்டது.
இதனால் கலெக்டர் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. கடும் வெயிலின் காரணமாக மனு கொடுக்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வழக்கமாக கூட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story