அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்; கண்ணாடி உடைப்பு
அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கியதுடன், பஸ் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அடையாறு,
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சை டிரைவர் செந்தில் ஓட்டினார். கண்டக்டராக பாலச்சந்தர் என்பவர் பணியில் இருந்தார். அந்த பஸ் சைதாப்பேட்டை கோர்ட்டு அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக போரூரை சேர்ந்த ஜோசப் (வயது 26), முகமது யாசின் (22), அப்துல் ரஹிம் (22), அருணாச்சலம் (21) ஆகியோர் 2 மோட்டார்சைக்கிள்களில் வந்தனர். அதில் ஒரு மோட்டார்சைக்கிளை அரசு பஸ் உரசியபடி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பஸ்சை துரத்திச்சென்று வழிமறித்து பஸ் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பஸ்சில் ஏறிய அவர்கள் 4 பேரும் டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கினர். பின்னர் பஸ்சின் கண்ணாடியையும் கல்வீசி தாக்கினர். இதில் கண்ணாடி உடைந்தது. அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற மயிலாப்பூர் துணை கமிஷனர் பி.சரவணன், தாக்குதலில் ஈடுபட்ட 4 வாலிபர்களையும் விரட்டிப்பிடித்து கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து கோட்டூர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து ஜோசப், முகமது யாசின், அப்துல் ரஹிம், அருணாச்சலம் ஆகிய 4 பேரையும் கைது செய்தார். விசாரணையில், அதிவேகமாக மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்து டிரைவர்-கண்டக்டருடன் அவர்கள் சண்டை போட்டது தெரியவந்தது.

Related Tags :
Next Story