சாலைகளை சீரமைக்க கோரி ஊராட்சி அலுவலகம் முன் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சாலைகளை சீரமைக்க கோரி ஊராட்சி அலுவலகம் முன் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 March 2018 4:30 AM IST (Updated: 20 March 2018 11:50 PM IST)
t-max-icont-min-icon

சாலைகளை சீரமைக்ககோரி ஊராட்சி அலுவலகம் முன் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவட்டார்,

திருவட்டார் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முளகுமூடு–பூவன்கோடு, முளவிளை–பருத்திவாய்க்கால், சந்திரன்விளை–இட்டாகுளம் ஆகிய சாலைகள் பழுதடைந்துள்ளது. அவற்றை சீரமைக்க வேண்டும். மேலும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரமான தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவட்டார் பகுதி தி.மு.க.வினர் காட்டாத்துறை ஊராட்சி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜாண்பிரைட் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் மனோகரன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரேமசுதா மற்றும் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இதில் மாவட்ட அவைத்தலைவர் பப்புசன், துணை செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் லெனின், ஒன்றிய பொருளாளர் மதன்குமார், மாநில பேச்சாளர் மணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் லாரன்ஸ் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். இதில் கலந்து கொண்டவர்கள் முளவிளை–பருத்திவாய்க்கால் உள்ளிட்ட சாலைகளை சீரமைக்காததை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

Next Story