மு.க.ஸ்டாலின், திருமாவளவன் கைதை கண்டித்து தி.மு.க.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
மு.க.ஸ்டாலின், திருமாவளவன் கைதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 131 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்,
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி விசுவ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நடைபெறும் ராம ராஜ்ய ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர், பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் பேசியதால் அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்ததை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டம் நடந்தது.
கரூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அருகே மனோகரா கார்னர் ரவுண்டானாவில் மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர். மொத்தம் 38 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரையும் தாந்தோன்றிமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதேபோல் குளித்தலை பஸ்நிலையம் அருகே தி.மு.க. சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு குளித்தலை நகர செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார். இந்த மறியல் போராட்டத்தில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சிவராமன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா மற்றும் நிர்வாகிகள் என மொத்தம் 4 பெண்கள் உள்பட 34 பேர் குளித்தலை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
புஞ்சை புகளூர் பேரூர் செயலாளர் சாமிநாதன் தலைமையில் வேலாயுதம்பாளையத்தில் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
தரகம்பட்டியில் கடவூர் ஒன்றிய செயலாளர் பிச்சை தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்திற்கு போராட்டம் நடத்த சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மதுரை அருகே கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் நிர்வாகிகள் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story