மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் 90 பேர் கைது


மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் 90 பேர் கைது
x
தினத்தந்தி 21 March 2018 4:30 AM IST (Updated: 21 March 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 90 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

விசுவ இந்து பரிஷத் அமைப்பின் ரதயாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து திருவாரூர் பஸ் நிலையம் அருகே தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் சேகர் கலியபெருமாள், முன்னாள் நகர சபை துணைத்தலைவர் செந்தில், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் கருணாநிதி, மாவட்ட சிறுப்பான்மை பிரிவு அமைப்பாளர் தாஜிதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது விசுவ இந்து பரிஷத் அமைப்பின் ரதயாத்திரையை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து திருவாரூர் டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 90 பேரை கைது செய்தனர். இதேபோல் திருவாரூர் பஸ் நிலையம் அருகே த.மு.மு.க. சார்பில் ரதயாத்திரையை தடை செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட த.மு.மு.க. மாவட்ட செயலாளர் பஜ்லுல்ஹக் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெருகவாழ்ந்தானில் கோட்டூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தி.மு.க. ஊராட்சி செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். இதில் 13 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story