சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்


சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 21 March 2018 4:00 AM IST (Updated: 21 March 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் சேதமடைந்த 18 சாலைகளை சீரமைக்க ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

என் முயற்சியால் குமரி மாவட்டத்தில் உள்ள சேதமடைந்த 18 சாலைகளை சீரமைக்க மத்திய சாலை நிதி தொகுப்பில் இருந்து ரூ.24 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

சீரமைக்கப்பட உள்ள சாலைகள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு விவரம் வருமாறு:-

ஆரல்வாய்மொழி- நெடுமங்காடு சாலைக்கு ரூ.50 லட்சம், குழித்துறை- ஆலஞ்சோலை- ஆறுகாணி சாலைக்கு ரூ.85 லட்சம், நீரோடி- இரயுமன்துறை சாலைக்கு ரூ.3 கோடியே 25 லட்சம். மருதங்கோடு சாலைக்கு ரூ.75 லட்சம், மேல்பாலை- கொடுக்காச்சிவிளை வடக்கன்விளாகம் அரிசன காலனி சாலைக்கு ரூ.60 லட்சம், புத்தன்துறை சாலைக்கு ரூ.30 லட்சம். மருதூர்குறிச்சி- பழையகடை சாலைக்கு ரூ.1 கோடியே 40 லட்சம், ஐந்துமாரிகோணம் சாலைக்கு ரூ.60 லட்சம், வெள்ளிபிள்ளையார் கோவில்- கீழ்கரை சாலைக்கு ரூ.1 கோடி, கொல்வேல்- பெருங்குளம்- தெற்றிகோடு சாலை ரூ.60 லட்சம்.

காணிமடம்- கனகப்பபுரம் சாலைக்கு ரூ.1 கோடி, சுசீந்திரம்- மருங்கூர் சாலை மற்றும் சுசீந்திரம்- வெள்ளமடம் சாலைக்கு ரூ.5 கோடியே 25 லட்சம், மருங்கூர்- அமராவதிவிளை சாலைக்கு ரூ.1 கோடி. முளகுமூடு- குளச்சல் சாலைக்கு ரூ.70 லட்சம், பாறசாலை- கொல்லங்கோடு சாலைக்கு ரூ.3 கோடி, இரும்பிலி சாலைக்கு ரூ.1 கோடி. ஆற்றூர்- மூவாற்றுமுகம்- சாரூர் சாலைக்கு ரூ.1 கோடியே 20 லட்சம், மருதங்கோடு- திருத்துவபுரம் சாலைக்கு ரூ.1 கோடி ஆக மொத்தம் ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிகள் அனைத்துக்கும் விரைவில் டெண்டர் கோரப்பட்டு, பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story