ரெயில்வேயில் பணிகேட்டு பயிற்சி மாணவர்கள் திடீர் மறியல் போலீஸ் தடியடி, கல்வீச்சில் பலர் காயம்


ரெயில்வேயில் பணிகேட்டு பயிற்சி மாணவர்கள் திடீர் மறியல் போலீஸ் தடியடி, கல்வீச்சில் பலர் காயம்
x
தினத்தந்தி 21 March 2018 5:02 AM IST (Updated: 21 March 2018 5:02 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில், ரெயில்வேயில் பணிகேட்டு பயிற்சி மாணவர்கள் திடீர் மறியல் போராட்டம் நடத்தியதால் 4 மணி நேரம் ரெயில் சேவை முடங்கியது.

லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். போலீசார் தடியடி நடத்தினர். பதிலுக்கு மாணவர்கள் கல்வீசி தாக்கினார்கள். இதில் பலர் காயம் அடைந்தனர்.

மும்பை,

நாட்டின் நிதி நகரமான மும் பையில், மக்களின் போக்குவரத்து உயிர்நாடியாக மின் சார ரெயில் சேவை கள் விளங்குகின்றன.

மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேக்கள் சார்பில் இயக்கப்படும் இந்த ரெயில் சேவைகளை தினசரி சுமார் 75 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

மும்பை மின்சார ரெயில்களில் காலை மற் றும் மாலை ஆகிய பிரதான நேரங்களில் கால் வைக்கக் கூட முடியாத அளவுக்கு பயணிகள் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் மும்பை புறநகர் ரெயில் போக்கு வரத்து நேற்று எதிர்பாராத போராட்டத்தின் காரண மாக முடங்கிப்போனது.

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள பிரதான ரெயில் நிலையமான தாதர்- மாட்டுங்கா இடையே நேற்று காலை 6.45 மணியளவில் ரெயில்வேயில் பயிற்சி பெறும் மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண் டனர். திடீரென அவர்கள் தண்டவாளத்தின் குறுக்கே வந்து மின்சார ரெயில்களை மறித்தனர்.

ரெயில்வேயில் தொழில் நுட்ப பணிகளுக்காக பயிற்சி பெற்றவர்களுக்கு ரெயி ல்வேயில் பணி வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்த முறை மாற்றப்பட்டு உள்ளது.

ரெயில்வே பணிகளில் அப்ரண்டிசாக பயிற்சி பெறுபவர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு என்ற முறையே தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையை ரத்து செய்யவேண்டும், ரெயில்வேயில் பயிற்சி பெற்ற தங்கள் அனைவருக்கும் ரெயில்வேயில் நிரந்த பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட் டனர்.

சிறிது நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மாணவர்கள் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் அதிகரித் தது. அவர்கள் சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர்.

புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் வழித்தடம் மட்டுமின்றி நீண்டதூர ரெயில்கள் செல்லும் விரைவு வழித்தடங்களையும் மறித்துவிட்டனர். பலர் தண்டவாளத்தின் குறுக்கே படுத்துக்கொண்டு ரெயில் வேக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதன் காரணமாக மெயின் வழித்தடத்தில் முற்றிலுமாக ரெயில் சேவை முடங்கியது. சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறநகர்களுக்கு செல்லும் ரெயில்களும், சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் ரெயில்களும் நடுவழியில் ஆங்காங்கே ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டன.

மும்பைக்குள் வந்த நீண்டதூர ரெயில்களும் நிறுத்தப்பட்டன. பலரும் வேலைக்கு செல்லும் காலை நேரம் என்பதால் மின்சார ரெயில்களில் அதிகளவில் கூட்டம் இருந்தது. இதன் காரணமாக ரெயில் பயணிகள் கடும் அவதிக் குள்ளானார்கள்.

ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலை மோதியது. ரெயில் சேவை பாதிப்பால் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.

ரெயிலை நம்பியிருந்த மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்துக்கு செல்லவேண்டும் என்பதற்காக அவசர, அவசரமாக பஸ்களையும், ஆட்டோ மற்றும் டாக்சிகளையும் பிடித்து சென்றதை காண முடிந்தது.

நடுவழியில் நின்ற ரெயில்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்து எரிச்சல் அடைந்த பயணிகளும் தண்ட வாளத்தில் இறங்கி நடையை கட்டினார்கள். நீண்டதூர ரெயில்களில் இருந்த பயணிகளும் உடைமைகளை தூக்கிக்கொண்டு ரெயில் நிலையங்களையொட்டி உள்ள பஸ் நிறுத்தங்களை நோக்கி படை எடுத்தனர்.

இதையடுத்து அவர்களின் வசதிக்காக ரெயில் நிலையங்களில் இருந்து பெஸ்ட் குழுமம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இதற்கிடையே, ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மறியலில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பயிற்சி மாணவர்களை அங்கிருந்து அமைதியான முறையில் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். ரெயில்வே அதிகாரிகளும் வந்து பேச்சுவார்த்தை நடத்தி னார்கள்.

இதில், எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.

இதுமட்டுமின்றி அங்கு கூட்டம் மேலும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதையடுத்து நிலைமையை சமாளிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீசாரை நோக்கி சரமாரியாக கல்வீசி தாக்கினார்கள்.

இதில், 2 பெண் போலீஸ் உள்பட 11 போலீசார் காயம் அடைந்தனர். போலீசார் தாக்கியதில் மாணவர்கள் சிலரும் காயம் அடைந்தனர். இதன் காரணமாக அங்கு பெரும் பதற்றம் உண்டானது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த போலீசார் தடியடி நடத்துவதை கைவிட்டனர்.

இந்தநிலையில், மத்திய ரெயில்வே உயர் அதிகாரிகள் பயிற்சி மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 நாளில் பயிற்சி மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அவர்கள் உறுதி அளித்ததாக தெரிகிறது. இதை ஏற்றுக்கொண்டு பயிற்சி மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்தனர்.

இதையடுத்து ரெயில் சேவை காலை 10.35 மணிக்கு சீராக தொடங்கியது. இதன் காரணாக ஏறத்தாழ 4 மணி நேரம் ரெயில் போக்குவரத்து முடங்கியது. காலை நேரத் தில் இயக்கப்படும் பல மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக லட்சக்கணக்கான ரெயில் பயணிகள் பரிதவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் 1,000 பேர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கல்வீச்சில் ஈடுபட்டதாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பையில் நடந்த ரெயில்வே பயிற்சி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டம் குறித்து டெல்லியில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு காலங்களில் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் ரெயில்வே பயிற்சி பெறும் மாணவர்களில் 20 சதவீதம் பேருக்கு வேலை வழங்கப்படுகிறது.

தற்போது ரெயில்வே குருப் ‘சி’ மற்றும் ‘டி’ காலி பணி இடங்களுக்காக 90 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு வருகிற 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

போராட்டத்தில் ஈடுபட்ட ரெயில்வே பயிற்சி மாணவர்கள் அந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நியாயமான முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story