திருத்துறைப்பூண்டியில் மத்திய அதிவிரைவு படையினர் அணிவகுப்பு


திருத்துறைப்பூண்டியில் மத்திய அதிவிரைவு படையினர் அணிவகுப்பு
x
தினத்தந்தி 22 March 2018 4:00 AM IST (Updated: 22 March 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் மத்திய அதிவிரைவு படையினர் அணிவகுப்பு நடத்தினர்.

திருத்துறைப்பூண்டி,

மத்திய அதிவிரைவு படையினர் தமிழகம் முழுவதும் பதற்றமான பகுதிகளை கண்டறிந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் அப்பகுதிகளில் அடையாள அணிவகுப்பையும் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் கோயம்புத்தூர் 105-வது பட்டாலியனை சேர்ந்த மத்திய அதிவிரைவு படையினர் கடந்த ஒரு வாரமாக திருவாரூர் ஆயதப்படை மைதானத்தில் முகாமிட்டுள்ளனர்.

இவர்கள் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பகுதியாக சென்று அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டியில் மத்திய அதிவிரைவு படையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பு நடத்தினர். இதில் கமாண்டர் ராஜா இளம்பரிதி தலைமை தாங்கினார்.

போலீசார்

திருத்துறைப்பூண்டி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகள் வழியாக அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story