சொத்து தகராறில் தாயை தாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு


சொத்து தகராறில் தாயை தாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 March 2018 10:15 PM GMT (Updated: 21 March 2018 9:03 PM GMT)

சொத்து தகராறில் தாயை தாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெருகவாழ்ந்தான்,

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் அருகே உள்ள பாலையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவி விஜயா(வயது56). இவர்களுக்கு ஞானசேகரன் (36), கார்த்திகேயன் (32) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. தாய் விஜயாவும், மகன் ஞானசேகரனும் தனியாக வசித்து வருகிறார்கள்.

கார்த்திகேயன் காதல் திருமணம் செய்து கொண்டு வெளியூரில் மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் 4 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் சொந்த ஊரான பாலையூருக்கு வந்தார். அப்போது தனது தாய் விஜயாவிடம், கார்த்திகேயன் சொத்து கேட்டதாக தெரிகிறது.

தாக்குதல்

இதனால் விஜயாவுக்கும், கார்த்திகேயனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் தனது தாய் விஜயாவை கையால் தலையில் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விஜயா பெருகவாழ்ந்தான் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story