குளச்சலில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி 2 பேர் படுகாயம்


குளச்சலில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 21 March 2018 10:15 PM GMT (Updated: 21 March 2018 9:03 PM GMT)

குளச்சலில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

குளச்சல்,

மண்டைக்காடு புதூரை சேர்ந்தவர் சகாயராஜ். இவருடைய மகன் சகாய ரஜித் (வயது 22). அதே பகுதியை சேர்ந்த அந்தோணி மகன் சகாய சரண் டோனி (22). மீன்பிடி தொழிலாளிகளான சகாய ரஜித்தும், சகாய சரண் டோனியும் நெருங்கிய நண்பர்கள். நேற்று மாலை இருவரும் மோட்டார் சைக்கிளில் குளச்சலுக்கு சென்றனர்.

பிறகு அங்கிருந்து மீண்டும் ஊர் நோக்கி புறப்பட்டனர். குளச்சலில் பஸ் நிலையம் வழியாக அரசு ஆஸ்பத்திரி அருகே சென்ற போது, எதிரே ரீத்தாபுரம் கணே புரத்தை சேர்ந்த ரமேஷ் (35) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன.

ஒருவர் சாவு

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் சகாய சரண் டோனி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

சகாயரஜித், ரமேஷ் ஆகிய 2 பேரும் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story