ஒரத்தநாடு அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது
ஒரத்தநாடு அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மோட்டார் சைக்கிளில் போலீசார் அழைத்து சென்றபோது அவர்கள் தப்பிச்செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் திருவோணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், ஊர்க்காவல்படை வீரர் பார்த்திபன் ஆகியோர் சம்பவத்தன்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செங்கிப்பட்டி-பட்டுக்கோட்டை காரியாவிடுதி பிரிவு சாலை அருகே 2 வாலிபர்கள் ஒரு ஸ்கூட்டரில் சென்றனர். அவர்கள் போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்தாமல் போலீசாரை திரும்பி பார்த்தவாறு வேகமாக சென்றனர். இதனால் சந்தேக மடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் அவர்களை தனது மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று அவர்களை மடக்கி பிடித்தார். அப்போது அந்த ஸ்கூட்டரில் பணம் மற்றும் சில்லரை நாணயங்கள், கியாஸ் வெல்டிங் எந்திரம், இரும்புக்கம்பி, கத்தி ஆகியவை இருந்தது.
இதனால் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், ஊர்க் காவல் படை வீரர் பார்த்திபன் ஆகியோர் 2 வாலிபர்களையும், ஸ்கூட்டருடன் திருவோணம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் பிடிபட்ட ஒருவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டார். மற்றொருவரை ஊர்க்காவல் படை வீரர் பார்த்திபன் ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு திருவோணம் போலீஸ் நிலையம் நோக்கி சென்றனர். இவர்கள் ஊரணிபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது சப்-இன்ஸ்பெக்டருடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தவர் திடீரென இரும்புக்கம்பியை எடுத்து தாங்கள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் நுழைத்தார். சக்கரத்தில் இரும்புக்கம்பி சிக்கியதால் மோட்டார் சைக்கிளுடன் நிலை தடுமாறிய சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் கிழே விழுந்தார்.
அப்போது பின்னால் ஸ்கூட்டரில் வந்த ஊர்க்காவல்படை வீரர் பார்த்திபன், கீழே விழுந்து கிடந்த மோட்டார் சைக்கிள் மீது ஸ்கூட்டருடன் மோதி அவரும் கிழே விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு பிடிபட்ட 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
ஆனால் சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு திரண்டு வந்த கிராம மக்கள் தப்பி ஓட முயன்ற 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட இருவரும் சம்பவத்தன்று நள்ளிரவு மேலஊரணிபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலின் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றபோது போலீசாரிடம் சிக்கியதும், இவர்களில் ஒருவர் பேராவூரணி சீவன்குறிச்சி சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் வீரப்பன்(வயது 35) என்றும், மற்றொருவர் அதிராம்பட்டினம் ஏரிகுளக்கரையை சேர்ந்த கந்தசாமி மகன் முரளி(25) என்றும் தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் திருவோணம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கோவில் உண்டியலில் திருடிய பணம், ஸ்கூட்டர், கியாஸ்வெல்டர், மற்றும் இரும்பு உருட்டுக்கம்பி, கத்தி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story