மணப்பாறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி
மணப்பாறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் தண்டவாளத்தையொட்டி உள்ள வீட்டின் முன் பிணமாக கிடந்தார்.
மணப்பாறை,
திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் மலை அருகே உள்ள பேத்துப்பாறை பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ் செபஸ்டின் (வயது 32). என்ஜினீயரான இவர் சென்னையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் திண்டுக்கல்லில் இருந்து சென்னை செல்வதற்காக செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினார். அவர் தன்னுடன் ஒருவரையும் அழைத்துச் சென்றார். முன்பதிவில்லா பெட்டியில் இருவரும் அமர்ந்து சென்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை ரெயில் நிலையத்தை கடந்து சென்ற போது ரெயிலில் இருந்து ஒருவர் தவறி விழுந்தார். இதை பார்த்த ரெயில் பயணிகள் உடனே அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். பின்னர் ரெயிலில் வந்தவர்களிடம் இதுகுறித்து கேட்ட போது, தன்னுடன் வந்த மோசஸ் செபஸ்டினை காணவில்லை என்று ஒருவர் கூறினார். இதனையடுத்து விசாரித்த போது ரெயிலில் இருந்து தவறி விழுந்தது மோசஸ் செபஸ்டின் என தெரியவந்தது. இதை தொடர்ந்து மோசஸ் செபஸ்டினுடன் வந்த நபரை மட்டும் அங்கு இறக்கிவிட்டு ரெயில் புறப்பட்டது.
இதுபற்றி மணப்பாறை ரெயில் நிலைய அதிகாரிகளுக்கும், திருச்சி ரெயில்வே போலீசாருக்கும் நள்ளிரவில் தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை ஜி.என்.ஆர்.மீட்புக்குழு நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரன் தலைமையில் முருகேசன், மகாராஜா, சதாம் உசேன் உள்ளிட்டோர் நள்ளிரவில் ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் மணப்பாறை ரெயில்நிலையம் அருகே உள்ள கீரைத் தோட்டத்தில் ஒரு வீட்டு வாசல் முன்பு இருந்து செல்போன் ‘ரிங்டோன்’ கேட்டுக்கொண்டே இருந்தது. இந்த சத்தத்தை கேட்டு ஜி.என்.ஆர்.மீட்புக்குழு வினர் அங்கு சென்று பார்த்த போது, இறந்து கிடந்தது மோசஸ் செபஸ்டின் என தெரியவந்தது. நள்ளிரவில் தூக்கத்தில் இருந்த அவர் ரெயிலில் இருந்து தவறி, தண்டவாளத்தையொட்டியுள்ள சுவற்றை தாண்டி ஒரு வீட்டின் முன்பு விழுந்து இறந்து கிடந்து உள்ளார்.
இதனையடுத்து திருச்சி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லெட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். செல்போனை கைப்பற்றிய போலீசார் அதன் மூலம் மோசஸ்செபஸ்டினின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மோசஸ் செபஸ்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story