புகையிலை பண்டல் கடத்தல் விவகாரம்: ரெயில்வே ஊழல் தடுப்பு பிரிவு கிடுக்கிப்பிடி விசாரணை, பின்னணியில் சமூக விரோத கும்பலா?
தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் ரெயில்களில் கடத்தி வரப்படும் பின்னணியில் சமூக விரோத கும்பல் செயல்பட்டு வருவதாக ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
மதுரை,
மதுரை ரெயில் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரெயில்வே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்களை கைப்பற்றினர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீதான விசாரணையின் பிடி இறுகியுள்ளது. உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
வாயில் மெல்லும் தன்மை கொண்ட புகையிலை பொருட்கள் உணவுப்பொருள் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வருகிறது. இதனால், உணவுப்பொருள் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால், சட்டவிரோதமாக வடமாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலமாக தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுகின்றன.
இது குறித்த புகார்கள் தென்னக ரெயில்வேயின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு வந்த வண்ணம் இருந்தன. அதனைத் தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வருவதை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அப்போது தான், புதுடெல்லியில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வருவது குறித்த தகவல் கிடைத்து மதுரை ரெயில்நிலையத்தில் அவற்றை கைப்பற்றினர். இந்த தனிப்படையினரின் விசாரணையில் பல விதிமீறல்கள் நடப்பதும் கண்டறியப்பட்டது. புகையிலை பண்டல்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில், புதுடெல்லி-கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் குத்தகை பார்சல் பெட்டி இணைக்கப்பட்டிருந்தது. இந்த பெட்டியை கன்னியாகுமரியில் மட்டுமே திறக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த விதி மீறப்பட்டு மதுரை ரெயில்நிலையத்தில் பார்சல் பெட்டி திறக்கப்பட்டுள்ளது.
இதற்காக ரெயில் 10 நிமிடங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. பார்சலை இறக்கியவர்கள் ரெயில்வே உரிமம் இல்லாத, ரெயில்வேக்கு தொடர்பில்லாத வெளிநபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரெயில்வே இயக்கப்பிரிவு, வர்த்தக பிரிவு அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
எனவே, அன்றைய தினம் பணியில் இருந்த இயக்கப்பிரிவு அதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள், ஸ்டேசன் மாஸ்டர், வர்த்தக பிரிவு அதிகாரிகள், வர்த்தக கட்டுப்பாட்டாளர்கள், பார்சல் பிரிவு அலுவலர்கள், ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நோட்டீசு அனுப்பி, தனிப்படை தனது கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, கைப்பற்றப்பட்ட பார்சல்கள் அனைத்தும் உணவுப்பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட வேண்டும். இதற்கிடையே, இது போன்று பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மதுரை ரெயில்நிலையத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட புகையிலை பண்டல்கள் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவற்றை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்த பின்னரே உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் எடுத்துச்சென்று அழிக்க முடியும். ஆனால், இந்த பார்சல்கள் கைப்பற்றப்பட்டு சுமார் ஒரு மாதத்துக்கு மேலாகியும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இதனால், பண்டல்கள் மதுரை ரெயில்நிலையத்தில் தேங்கிக்கிடக்கிறது.
ஏற்கனவே, மதுரை ரெயில் நிலையத்தில் புகையிலை பண்டல்கள் கைப்பற்றப்படும் விவகாரத்தில் பல்வேறு போலீஸ் அதிகாரிகள், ரெயில்வே ஊழியர்கள் சிக்கி தண்டனைக்குள்ளாகியுள்ளனர். இருப்பினும் இந்த பிரச்சினை தொடர்ந்து நீடிப்பதற்கான மர்மம் விலகாமல் உள்ளது. இதன் பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க்குடன் உள்ள ஒரு சமூக விரோத கும்பல் இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது என்று ஊழல் தடுப்பு பிரிவு தரப்பில் கூறப்படுகிறது.

Related Tags :
Next Story