சிவகிரி பகுதியில் வறட்சியால் பட்டுப்போன தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
சிவகிரி பகுதியில் வறட்சியால் பட்டுப்போன தென்னை மரங்களுக்கு உடனே நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
சிவகிரி,
சிவகிரி மற்றும் இதன் சுற்று பகுதிகளான வேட்டுவபாளையம், நல்லசெல்லிபாளையம், கோரக்காட்டுபுதூர், எல்லபாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருந்து வந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் பட்டுப்போய்விட்டன. தென்னைமரக்கன்று நடவு செய்தால் சராசரியாக 3 ஆண்டுகளுக்குள் காய் பிடித்துவிடும். அதன் மூலம் ஆண்டுக்கு சராசரி ரூ.600 முதல் ரூ.900 வரை வருமானம் கிடைக்கும்.
கடந்த 3 ஆண்டுகள் மழைபொய்த்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. கடும் வறட்சியால் தென்னை மரங்களும் பட்டுப்போய் விட்டன. இதனால் நாங்கள் வருமானமின்றி தவிக்கிறோம். ஆனால் இதுவரை அரசு பட்டுப்போன தென்னை மரங்களுக்கு நிவாரணம் எதுவும் கொடுக்கவில்லை. மேலும் தமிழ்நாடு வேளாண்மை அலுவலகம் மூலம் நாங்கள் தென்னை மரங்களுக்கு இன்சூரன்சு செய்தோம். ஆனால் எங்களுக்கு இன்சூரன்சு தொகை வழங்கவில்லை. எனவே உடனே எங்களுக்கு நிவாரண தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story