அண்ணா சிலையிடம் மனு அளித்து வக்கீல்கள் நூதன ஆர்ப்பாட்டம்


அண்ணா சிலையிடம் மனு அளித்து வக்கீல்கள் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 March 2018 4:15 AM IST (Updated: 23 March 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வலியுறுத்தி அண்ணா சிலையிடம் மனு அளித்து வக்கீல்கள் நூதன ஆர்ப்பாட்டம்.

தாமரைக்குளம்,

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை முதல் வக் கீல்கள் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலை யில் நேற்று அவர்கள், நீதிமன்ற பணிகளை புறக்கணித்து அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையிடம் மனு அளித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தலைவர் ஜெயக் குமார் தலைமை தாங்கி னார். செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஒதுக்கிய நிலத்தில் உடனடியாக ஒருங் கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உடனடியாக தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதில் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கொளஞ்சி நாதன் நன்றி கூறினார். 

Next Story