லஞ்சம் வாங்கிய தர மதிப்பீட்டு அதிகாரி உள்பட 3 பேர் கைது
விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தர மதிப்பீட்டு அதிகாரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவுரங்காபாத்,
ஹிங்கோலி மாவட்டம் கலம்நூரியை சேர்ந்த விவசாயி ஒருவர், தான் உற்பத்தி செய்த 80 குவிண்டால் துவரம் பருப்பை கலம்நூரி விவசாய விளைபொருட்கள் சந்தைப்படுத்தும் கமிட்டிக்கு கொண்டு வந்தார். அப்போது, அங்கு கமிட்டி தலைவராக உள்ள சஞ்சய் காப்டே(வயது41), செயலாளர் பாபுலால் ஜாதவ்(56) மற்றும் தர மதிப்பீட்டு அதிகாரி கோபிநாத் கராட்(25) ஆகியோர் விவசாயியிடம் குவிண்டாலுக்கு ரூ.500 வீதம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டனர்.'
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி, இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து 3 அதிகாரிகளையும் கையும், களவுமாக பிடிக்க நினைத்த லஞ்சஒழிப்பு போலீசார் விவசாயியிடம் ரசாயனபொடி தடவிய ரூ.40 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர்.
சம்பவத்தன்று விவசாயி அந்த பணத்தை அதிகாரிகளிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் 3 பேரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

Related Tags :
Next Story