மந்திரி எம்.பி.பட்டீல் ரூ.25 கோடி லஞ்சம் பெற்றார் எடியூரப்பா குற்றச்சாட்டு
பத்ரா மேல் அணை கால்வாய் அமைக்கும் திட்டத்தில் மந்திரி எம்.பி.பட்டீல் ரூ.25 கோடி லஞ்சம் பெற்றதாக எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வறட்சி பாதித்த பகுதிகளான சிக்கமகளூரு, சித்ரதுர்கா, துமகூரு, தாவணகெரே, ஹாசன், ராமநகர், பெங்களூரு புறநகர், கோலார் மற்றும் சிக்பள்ளாப்பூர் ஆகிய மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க விஸ்வேஸ்வரய்யா நீர் கழகம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பத்ரா மேல் அணை கால்வாய் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியது.
சித்தராமையா மந்திரிசபையில் அதிக ஊழல் செய்த மந்திரிகளில் ஒருவரான நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் தனக்கு வேண்டியவர்களை விஸ்வேஸ்வரய்யா நீர் கழக இயக்குனர்களாக நியமித்துக் கொள்கிறார். தனது விருப்பப்படி நடந்து கொள்ளும் அதிகாரிகளை அவர் நியமித்துக் கொள்கிறார்.
இந்த நிலையில் 2.9 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சித்ரதுர்கா கால்வாய் அமைக்கும் பணிக்கு ரூ.157 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த கால்வாய் அமைக்கும் பணி ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணையை ஒசதுர்கா செயற்பொறியாளர் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி வழங்கினார்.
இந்த திட்ட டெண்டரில் 2 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றன. அந்த நிறுவனங்கள் இத்தகைய திட்ட பணிகளை மேற்கொள்வதில் அனுபவம் உள்ளதாக சான்றிதழை வழங்கியுள்ளன. அந்த சான்றிதழ் மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்களை சேர்ந்தவை ஆகும். ஆனால் அத்தகைய எந்த சான்றிதழும் அந்த குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு வழங்கவில்லை என்று சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கூறியுள்ளன.
அந்த நிறுவனங்கள் போலியாக அனுபவ சான்றிதழை தயாரித்து வழங்கியுள்ளன. அந்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்கள் கூறியுள்ளன. இதன்மூலம் கர்நாடக அரசு அதிகாரிகள் தான் இந்த அனுபவ சான்றிதழை தயாரித்து கொடுத்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.
இந்த நிலையில் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ரூ.157 கோடி திட்ட பணியில் பெரிய அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இதில் மந்திரி எம்.பி.பட்டீல் ரூ.25 கோடி லஞ்சம் பெற்றுள்ளார். இதில் சித்தராமையாவுக்கும் பங்கு உள்ளது. சித்தராமையா அரசு ‘கமிஷன் அரசு’ என்பதற்கு இதுவே சாட்சி ஆகும். இது 10 சதவீத ‘கமிஷன்‘ அரசு இல்லை. 30 சதவீத ‘கமிஷன் அரசு’ ஆகும்.
இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மந்திரி எம்.பி.பட்டீலை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். அடுத்தடுத்து வரும் நாட்களில் சித்தராமையா அரசின் பெரிய ஊழல்களை பகிரங்கப்படுத்த உள்ளேன். நாட்டிலேயே ஊழலில் கர்நாடக காங்கிரஸ் அரசு தான் முதல் இடத்தில் உள்ளது. இந்த அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Related Tags :
Next Story