கீழ்விஷாரத்தில் இரு பிரிவினரிடையே மோதல்; சாலை மறியல்
ஆற்காடு அருகே கீழ்விஷாரத்தில் இரு பிரிவினரிடையே மோதல் காரணமாக சாலை மறியல் நடைபெற்றது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஆற்காடு,
ஆற்காடு அருகே கீழ்விஷாரம் மற்றும் அருகே உள்ள தஞ்சாவூரான்காலனி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இடையே கடந்த வாரத்தில் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று கீழ்விஷாரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி நேற்று இரவில் அம்மன் தேர் ஊர்வலம் நடைபெற்றுள்ளது.
அப்போது கீழ்விஷாரம் பகுதியில் இருந்து தஞ்சாவூரான் காலனிக்கு செல்லும் வழியில் உள்ள சந்து போன்ற பகுதியில் கீழ்விஷாரத்தை சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென புகுந்து கற்கள் மற்றும் கத்தியால் தாக்கியுள்ளனர்.
இதில் தஞ்சாவூரான் காலனியை சேர்ந்த மகேந்திரன் (43), ஸ்ரீராம் (15), விஸ்வா (13) ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து தஞ்சாவூரான் காலனியை சேர்ந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யக்கோரி கீழ்விஷாரம் -ஆற்காடு சாலை தஞ்சாவூரான் காலனியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல செய்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக ஆற்காடு டவுன் போலீசார் கீழ்விஷாரத்தை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்விஷாரம் பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட இந்த மோதலால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story