வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள் முன்பு குப்பை தொட்டி : மேட்டூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
மேட்டூர் நகராட்சியில் வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள் முன்பு குப்பை தொட்டியை வைத்து நூதன முறையில் மேட்டூர் நகராட்சி நிர்வாகம் வரி வசூலில் ஈடுபட்டுள்ளது.
மேட்டூர்,
மேட்டூர் சதுரங்காடியில் உள்ள ஒரு வணிக நிறுவனம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் நீண்ட நாட்களாக பாக்கி வைத்திருந்தது. இந்த வரியை வசூல் செய்வதற்காக மேட்டூர் நகராட்சி நிர்வாகம் நூதன முறையை கையாண்டது.
அதாவது அந்த வணிக நிறுவனத்தின் நடுவாசல் முன்பு நேற்று காலை இரண்டு குப்பை தொட்டிகளை நகராட்சி வண்டியின் மூலம் எடுத்து சென்று வைக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வணிக நிறுவனத்தின் உரிமையாளர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரித்தொகையை செலுத்தினார். உடனே அங்கிருந்த குப்பை தொட்டிகளை எடுத்து சென்று அதே பகுதியில் உள்ள வரி செலுத்தாத மற்றொரு வணிக நிறுவனத்தின் நுழைவு வாயில் முன்பு மேட்டூர் நகராட்சி ஊழியர்கள் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குப்பை தொட்டியை வைத்து நூதனமுறையில் வரி வசூல் செய்யும் மேட்டூர் நகராட்சியின் நடவடிக்கை வரி செலுத்தாத வணிக நிறுவனத்தினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story